Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய அணி திணறல் – அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!

அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ள இந்திய அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து கேப்டன் மோர்கன் பந்துவீச்சை தேர்வு செய்தார். டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்றிய நிலையில் டி20 தொடரையும் கைப்பற்றும் முனைப்பில் இருக்கிறது. ஆனால் இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று நினைப்பதன் காரணமாக இன்றைய போட்டி பரபரப்பில் பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் டி20 போட்டியில் இந்திய அணி திணறி வருகிறது. 7 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 29 ரன்கள் மட்டுமே இந்திய அணி எடுத்துள்ளது. தவான்( 4), கேஎல் ராகுல்( 1), கோலி (0) அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்ததால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |