Categories
விளையாட்டு கிரிக்கெட்

“இந்திய அணியின் பிரச்சனையே இதுதான்”.… “அத இவர்களால்தான் சரிசெய்ய முடியும்”…. சுரேஷ் ரெய்னா ஓபன் டாக்….!!!

இந்திய அணி உலக கோப்பை தொடரில் வெற்றி பெற, சில பிரச்சினைக்கான தீர்வுகளை சுரேஷ் ரெய்னா வழங்கியுள்ளார்.

இந்திய அணி 2023 -ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒரு நாள் உலக கோப்பை தொடரை எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற நோக்கில் இப்போதிருந்தே தயாராகி வருகிறது. இதற்காக அணியில் பல மாற்றங்களை செய்து வந்தாலும், மிடில் வரிசையின் சொதப்பல் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. ஓபனர்கள், ஒன் டவுன் பேட்ஸ்மேன் விரைவில் ஆட்டம் இழந்து விட்டால் இந்தியாவின் தோல்வி உறுதியாகிவிடும் நிலை உள்ளது. அதிலும் குறிப்பாக முதல் மூன்று பேட்ஸ்மேன்களை நம்பித்தான் இந்திய அணியே இருக்கிறது.

இந்த நிலையில் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா இந்த மிடில் வரிசை பிரச்சினையை தீர்க்க சில ஆலோசனை வழங்கியுள்ளார். கடந்த 2015-ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடருக்குப் பின் இந்திய அணி மிடில் வரிசையில் பலரை களமிறக்கி சோதனையில் ஈடுபட்டுவருகிறது. ஆனால் இப்போது வரை நிலையான மிடில் வரிசை எதுவும் அமையவில்லை. எனவே இனியும் இந்த தவறு நீடிக்கக் கூடாது, உலக கோப்பையை வெல்ல வேண்டுமென்றால் இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என கூறினார்.

மேலும் பேசிய ரெய்னா ஷ்ரேயஸ் ஐயர், ரிஷப் பந்த் போன்ற வீரர்களுக்கு இனி வரும் போட்டிகளில் தொடர்ந்து வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம். இதனை அடுத்து ஷுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் ஆகியோருக்கு மிடில் வரிசைக்கு இடம் கொடுத்தால் சிறப்பாக இருக்கும் என தெரிவித்தார். மேலும் ரிங் சிங்கிற்கும் மிடில் வரிசையில் இடம் கொடுக்கலாம் என்று ரெய்னா தெரிவித்தார். அவர் ஏற்கனவே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 55 லட்சம் மதிப்பில் ஏலம் போயுள்ள நிலையில், இவருக்கு இந்திய அணியின் மிடில் வரிசையில் வாய்ப்பு கொடுக்கவேண்டும் என ரெய்னா  கூறியிருப்பது ஆச்சரியமாக  பார்க்கப்படுகிறது.

Categories

Tech |