இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக்கு இடையிலான 4-வது டி20 போட்டியில் மைக்கல் வாகன் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நான்காவது டி20 போட்டி நடைபெற்றது.அதில் இந்தியா 8 ரன்கள் வித்தியாசத்தில் பெற்றுள்ள நிலையில் 5 போட்டிகள் கொண்ட டி20 இல் 2 -2 சம நிலையை அடைந்துள்ளது. இந்திய அணிக்காக விளையாடிய சூர்யகுமார் யாதவ் கேப்டன்சி செய்த ரோஹித் சர்மா ஹர்த்திக் பாண்டியா ராகுல் சஹார் போன்றவர்கள் ஐபிஎல் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடியவர்கள் என மைக்கேல் வாகன் கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.
மேலும் மைக்கல் இவர்கள் அனைவரும் நேற்று நடந்த போட்டியில் நன்றாக விளையாடி அசத்தியுள்ளனர் எனவும் இந்தியாவிற்கு பெரும் வெற்றியை ஏற்படுத்திக் கொடுத்ததாகவும் சூட்சுமமாக கேலி செய்தார்.முதல் டி20 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி இந்திய அணியை விட சிறப்பாக விளையாடுகிறது என்று முன்னதாகவே மைக்கேல் வாகன் விமர்சித்துள்ளார். மைக்கேல் வாகனனுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய வீரர் வசீம் ஜாபர் “உங்கள் அணியை வீழ்த்தியது இந்திய அணி அல்ல உள்நாட்டு தொடருக்கான அணி ஒரு நாள் நீங்கள் அசிங்கப்படுத்துவது இந்திய அணியை அல்ல உங்கள் சொந்த அணியை தான்” என்று கூறினார்.
இந்நிலையில் இறுதி கட்ட ஆட்டத்தில் கடைசி நாலு ஓவருக்கு கேப்டன்சியை கோலி ரோகித்திடம் கொடுத்து விட்டு வெளியேறியுள்ளார். இந்திய அணி வெற்றி பெற ரோஹித் சிறந்த கேப்டன்சி செய்துள்ளார். மேலும் டி20 போட்டியில கோலி சிறந்த முறையில் கேப்டன்சி செய்ததாகவும் இக்கட்டான நேரத்தில் ரோஹித்திடம் கேப்டன்சி கொடுத்துவிட்டு அணியிலிருந்து வெளியேறி நல்ல உத்தியை மேற்கொண்டதாகவும் மைக்கேல் வாகன் கிண்டல் செய்துள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பி தற்போது பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது.