இந்தியா மற்றும் சீனா இடையேயான பிரச்சனை எல்லையில் பல ஆண்டுகளாக நீடித்து கொண்டு இருப்பது அனைவரும் அறிந்ததே. இப்படிப்பட்ட சூழலில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே போர் நடந்தால் யார் வெற்றி பெறுவார்கள் என்று உங்களுக்கு தெரியுமா?… நீங்கள் நினைக்கலாம் சீனாவிடம் தான் அதிக ராணுவ பலம் உள்ளது, அதனால் சீனாதான் வெற்றி பெறும் என்று உங்கள் மனதில் தோன்றும். ஆனால் அது ஒரு தவறான எண்ணம். உண்மையிலேயே போர் நடந்தால் சீனாவிடம் இந்தியா தான் வெற்றி பெறுவோம்.
ஏனென்றால் ஒரு பெரிய மரத்தை ஐந்து மணி நேரத்தில் வெட்ட வேண்டும் என்று கூறினால், இந்திய வீரர் 4 மணி நேரம் அந்த கோடாலியை திட்டிவிட்டு கடைசி ஒரு மணி நேரத்தில் மரத்தை வெட்டி சாய்த்த விடுவார். ஆனால் இதுவே சீனாவிடம் கூறினால் நிறைய கோடரிகளை கேட்பார்கள். அவனைப் போலவே தான் சீனாவிடம் நிறைய ஆயுதங்களும் ராணுவ வீரர்களும் இருக்கலாம், இருந்தாலும் இந்திய வீரர்கள் தான் திறமை கொண்டவர்கள். அதுமட்டுமல்லாமல் சீனாவிற்கு ஆதரவாக பாகிஸ்தான் மற்றும் ஸ்ரீலங்கா ஆகிய இரண்டு நாடுகள் மட்டுமே உள்ளன.
ஆனால் இந்தியாவிற்கு ஆதரவாக உலகிலேயே மிகப்பெரிய இராணுவத்தைக் கொண்ட அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய இரண்டு நாடுகளுமே இந்தியாவிற்கு ஆதரவாக தான் செயல்படும். உண்மையாகவே சீனா இந்தியாவை அழிக்க முயற்சி செய்கிறார்கள் என்றால், அது உண்மை இல்லை. ஏனென்றால் சீனாவின் மிகப்பெரிய வர்த்தகம் இங்கு தான் உள்ளது. ஒரு வருடத்திற்கு சராசரியாக 50 ஆயிரம் கோடிக்கு மேல் இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்கின்றனர். ஆனால் இந்தியா 17 ஆயிரம் கோடிக்கு மட்டுமே இங்கிருந்து சீனாவிற்கு ஏற்றுமதி செய்கிறது. இந்த வர்த்தக ரீதியான தொடர்பை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அவ்வபோது சீனா இந்தியாவை மிரட்டிக் கொண்டே இருக்கிறது.