எகிப்தின் கென்யா தலைநகர் நைரோபியில் நடைபெற்று வரும் 20 வயதுக்குட்பட்டோருக்கான உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா வெண்கலம் வென்று அசத்தியுள்ளது. இதற்கு முன் இந்தியாவின் சார்பாக பங்கேற்ற சீமா அன்டில் , நவ்ஜீத் கவுர், ஒலிம்பிக் சாம்பியன் நீரஜ் சோப்ரா , ஹிமா தாஸ் ஆகியோர் இந்தப் போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கம் வென்றுள்ளனர்.
இந்நிலையில் தற்போது முதன்முதலாக 4*400 மீ., கலப்பு தொடர் ஓட்ட போட்டியில் இந்தியாவின் கபில், பிரியா மோகன், சம்மி, ஸ்ரீதர் அடங்கிய அணி 3 நிமிடம் 23.36 வினாடி நேரத்தில் வந்தது வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளனர். அவர்களுக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் தங்களது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.