பாகிஸ்தானை இந்திய அணி வென்றதற்கு முக்கிய காரணமாக இருந்த ஹர்திக் பாண்டியாவிற்கு முத்தம் கொடுத்து கொண்டாடிய ஆப்கானிஸ்தான் நபரின் வீடியோ வைரலாகி வருகிறது.
அனைவரும் எதிர்பார்த்த இந்தியா – பாகிஸ்தான் இடையேயான ஆசிய கோப்பை லீக் போட்டி நேற்று துபாயில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி டாஸ் வென்று பந்து வீச முடிவு செய்தது. அதன்படி பாகிஸ்தான் அணி களமிறங்கியது. இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசியதால் பாகிஸ்தான் அணி 19.5 ஓவரில் அனைத்து விக்கெட் இழந்து 147 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் முகமது ரிஸ்வான் மட்டும் முடிந்த அளவிற்கு தட்டி தடுமாறி 43 (42) ரன்கள் எடுத்தார்.. மேலும் இப்திகார் அகமது 28 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் புவனேஸ்வர் குமார் 4 விக்கெட்டுகளும், ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளும், அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.
பின்னர் 148 ரன்கள் அடித்தால் என்ற வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் கே.எல் ராகுல் நஸீம் ஷா பந்து வீச்சில் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். அதன் பின் ரோகித் சர்மா 12 ரன்னில் வெளியேறினார். ஓரளவு தாக்குப்பிடித்த விராட் கோலி 35 ரன்கள் எடுத்து ஆறுதல் அளித்தார்.. சூரியகுமார் யாதவ் 18 ரன்னில் ஆட்டம் இழந்தார்.. இந்திய அணி அப்போது 14.2 ஓவரில் 89/4 என்று இருந்தது. இதற்கிடையே 3ஆவது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஜடேஜா மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் சிறப்பாக பந்துவீச்சாளர்களை கையாண்டனர்.. ஓவருக்கு 10 ரன்கள் தேவை என்ற நிலையில் சிறப்பாக கடைசிவரை எடுத்துச் சென்றனர்.
கடைசியாக இரண்டு ஓவரில் 21 ரன்கள் தேவைப்பட, ரசிகர்கள் பரபரப்புடன் பார்த்து கொண்டிருந்த நேரத்தில், 19 வது ஓவரில் 14 ரன்கள் கிடைத்தது. கடைசி ஓவரில் 7 ரன்கள் என்ற நிலை வந்த நிலை போது, முகமது நவாஸ் வீசிய முதல் பந்தை 35 (29) ரன்கள் எடுத்திருந்த ஜடேஜா சிக்சர் அடிக்க முயன்று கிளீன் போல்ட் ஆகி வெளியேறினார்.. அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் இரண்டாவது பந்தில் ஒரு சிங்கிள் எடுத்து ஹர்த்திக்கிடம் கொடுத்தார்..
இதையடுத்து 3ஆவது பந்தை ஹர்திக் அடிக்க அது பீல்டரிடம் சென்று டாட் பாலானது.. அப்போது 3 பந்துகளில் 6 ரன்கள் தேவை என்றதால் ரசிகர்கள், திக் திக் இதயத்துடிப்புடன் பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது ஹர்திக் பாண்டியா தலையை சரித்து நான் பார்த்து கொள்கிறேன் என்பதுபோல கார்த்திக்கிடம் சொன்னார்.. 3 பந்தில் 6 ரன்கள் தேவைப்பட அந்த பந்தை பாண்டியா சிக்ஸர் விளாசி இந்திய அணியை வெற்றி பெறச் செய்தபின் கடமையை முடித்து விட்டதாக கூலாக கையை ஸ்டைலாக தூக்கி காட்டினார். பின் தினேஷ் கார்த்திக் ஹர்திக் பாண்டியாவின் அருகில் சென்று குணிந்து தலைவணங்கி மரியாதை கொடுத்து பேட்டை தட்டி பாராட்டினார். சீனியர் வீரர் தினேஷ் கார்த்திக், இளம்வீரர் பாண்டியாவின் ஆட்டத்திற்கு மரியாதை கொடுத்த வீடியோ மற்றும் புகைப்படம் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. தினேஷ் கார்த்திகை பாராட்டி வருகின்றனர்..
இந்த போட்டின் கடைசியில் இந்திய ரசிகர்கள் தான் பதட்டத்துடன் இருந்துள்ளனர்.. ஆனால் அவர் பதட்டமடையாமல் சிக்ஸர் அடித்து அணியை வெற்றிபெற வைத்து, ஆட்டநாயகன் விருதையும் தூக்கி சென்றார். ஹர்திக் 17 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரியுடன் 33 ரன்கள் எடுத்து இருந்தார்.. அதேபோல் பந்துவீச்சிலும் 4 ஓவர்கள் வீசி 25 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்தார்.
2018 ஆம் ஆண்டு ஆசிய கோப்பையின் போது முதுகு தண்டில் காயம் ஏற்பட்டதன் காரணமாக ஸ்ட்ரெக்ச்சரில் கொண்டு செல்லப்பட்டு, அறுவை சிகிச்சை மேற்கொண்ட பின் அந்த தொடரில் இருந்து விலகியதுடன் இரண்டு ஆண்டுகளாக பந்து வீச மிகவும் கஷ்டப்பட்டு வந்தார் ஹர்திக் பாண்டியா.. இனி இவர் திரும்பி வருவது கடினம் என்று அனைவரும் எதிர்பார்க்கப்பட்ட வேலையில், கடந்த ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் கேப்டனாக இருந்து சிறப்பாக பந்து வீசியதுடன் ஐபிஎல் கோப்பையும் வென்று கொடுத்த நிலையில், அதற்குப்பின் நடந்த தொடர்களிலும் சிறப்பாக செயல்பட்டு வந்த பாண்டியா தற்போது இந்த போட்டியில் இந்திய அணிக்கு வெற்றியை பரிசளித்துள்ளார்..
கடந்த 2021 டி20 உலக கோப்பையில் தோல்வி அடைந்ததற்கு இந்திய அணி இந்த ஆசிய கோப்பையில் பழி தீர்த்ததால் நாடு முழுவதும் உள்ள ரசிகர்கள் தெருக்களிலும், வீடுகளிலும் கொண்டாடினர்.. மறுபக்கம் பாகிஸ்தான் ரசிகர்கள் ஷஹீன் அப்ரிடி இல்லாத நிலையில், 148 ரன்கள் அடிப்பதற்கு இந்திய அணிக்கு 20 ஓவர் வரை தேவைப்பட்டது என்று சமாளித்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.. இருப்பினும் இது ஒரு தரமான சிறப்பான வெற்றி என்று இந்திய ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.. அதே சமயம் ஆப்கானிஸ்தான் ரசிகர்களும் இந்த வெற்றியை கொண்டாடி வருகின்றனர். இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Congratulations to all our brothers. Indians And Afghans🇦🇫🇮🇳. We the people Afghanistan celebrating this victory with or friend country indian people. #India #ViratKohli𓃵 #pandya #INDvsPAK pic.twitter.com/FFI5VvKE0d
— A H (@arayankhani) August 28, 2022
நேற்று நடந்த இந்த அனல் பறந்த ஆட்டத்தை உலகம் முழுவதும் நிறைய பேர் கண்டு களித்த நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்களும் இந்த கிரிக்கெட் போட்டியை தங்களது வீடுகளில் உட்கார்ந்து குழுக்களாகவும் பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த வீடியோவில், ஒருவர் இந்திய அணி வெற்றி பெற்றதும் கையை உயர்த்தி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார். பின்னர் அவர் டிவிக்கு அருகில் சென்று ஹர்திக் பாண்டியாவிற்கு அன்பு கலந்த முத்தத்தை கொடுத்துவிட்டு செல்கிறார். இது அங்கிருந்த ரசிகர்களின் முகத்தில் வியப்பையும் புன்னகையையும் மலரச் செய்தது.
இந்தியா அண்டை நாடான ஆப்கானிஸ்தானுக்கு பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றது. பொருளாதார உதவிகள் அணைகள் மற்றும் சாலைகள் போன்ற பல உதவிகளை செய்து வருகிறது. மறுபக்கம் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் நாட்டை அச்சுறுத்தும் வகையில் செயல்களை செய்து வருவதால் ஆப்கானிஸ்தான ரசிகர்கள் இந்திய வெற்றியை நமது நாட்டு வெற்றியை போல கொண்டாடி வருகின்றனர் என்று இந்திய ரசிகர்கள் கூறுகின்றனர்.