இந்தியா-வங்கதேசம் இடையே 56 ஆண்டுகளாக மூடப்பட்ட வழித்தடத்தில் சரக்கு ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. 1965 ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் போரின் போது இந்த வழித்தடத்தில் சென்று கொண்டிருந்த ரயில் சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டது. பின்னர் கடந்த டிசம்பர் மாதம் பிரதமர் மோடியும், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவும் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தனர். பின்னர் இந்தியா முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வந்ததன் காரணமாக போக்குவரத்து சேவைகளும், ரயில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் இந்தியா-வங்கதேசம் இடையே சேவை தொடங்கப்பட்டுள்ளது.
Categories
இந்தியா – வங்கதேசம் வழித்தடத்தில்…. 56 ஆண்டுகளுக்கு பிறகு தொடங்கிய ரயில் சேவை…!!!
