Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இந்தியா முழுவதும் பரபரப்பு – செங்கோட்டை முற்றுகை… விவசாயிகள் ஆவேசம் …!!

டிராக்டர் பேரணி நடத்திய விவசாயிகள் டெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியின் பல்வேறு எல்லைகளை முற்றுகையிட்டிருந்த விவசாய சங்க போராட்டகாரர்கள் இன்று நடத்திய டிராக்டர் பேரணியில் அனுமதிக்கப்பட்ட சாலைகள்  விட்டு விலகி டெல்லியின் பல்வேறு பகுதிகளில் நுழைந்திருக்கிறார்கள். அதில் ஒரு பகுதியாக ITO மற்றும் மற்றும் செங்கோட்டையை நோக்கி விவசாய சங்கத்தினர் டிராக்டர்கள் மூலம் பயணிக்க முயற்சித்த போது போலீசார் அவர்களை தடுக்க முயற்சி செய்தார்கள். இருந்த போதிலும் அவர்கள் போலீசாரை தாக்கிவிட்டு டெல்லி செங்கோட்டையை நோக்கி முன்னேறி தற்போது செங்கோட்டையை அடைந்திருக்கின்றார்கள்.

இன்று குடியரசு தினம் என்பதால் குடியரசு தின அணிவகுப்பு முடியும் இடமாக செங்கோட்டை இருக்கிறது. அங்கேதான் அணிவகுப்பு சம்பந்தப்பட்ட அலங்கார ஊர்திகள் மற்றும் பிற வாகனங்கள் நிறுத்திவைக்கப்படும். ஆகவே ஒரு முக்கியமான, பாதுகாப்பு ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த இடமாக கருதப்படும் செங்கோட்டையை தற்போது விவசாயிகள் சூழ்ந்திருக்கின்றார்கள்.

வழிநெடுக பல்வேறு இடங்களில் கடும் வன்முறையில் ஈடுபட்ட விவசாய சங்க போராட்டக்காரர்கள், சாலைத் தடுப்புகளை உடைத்து இருக்கிறார்கள். போலீசாரை தாக்கி இருக்கிறார்கள். டிராக்டர்களை தாறுமாறாக ஓட்டி சில இடங்களில் போலீசார் மீது மோத முற்பட்டதாகவும், வழியில் இருந்த தடங்கல்கள் அனைத்தையும் உடைத்து தகர்த்து கொண்டு தற்போது விவசாய சங்கத்தைச் சேர்ந்தவர்கள் டெல்லி செங்கோட்டையை அடைந்துள்ளார்கள்.

Categories

Tech |