இந்தியா முழுவதிலுமுள்ள பட்டதாரிகளுக்கு அமேசான் நிறுவனம் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்தியா முழுவதிலும் லட்சக்கணக்கான பட்டதாரிகள் வேலை இல்லாமல் திண்டாடிக் கொண்டிருகின்றனர். இந்நிலையில் அமேசான் நிறுவனம் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அமேசான் நிறுவனம் இந்தியா முழுவதிலும் 20000 டெலிவிரி நபர்களை பணிக்கு எடுக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
அந்தப் பணிக்கு பள்ளி அல்லது கல்லூரி தேர்ச்சி சான்றிதழ் கட்டாயம். மேலும் மாதம் 30 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்க முடியும். இந்தப் பணிக்கு விருப்பமுள்ளவர்கள் https://logistics.Amazon.in/applynow என்ற இணையத்தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.