இலங்கை அரசு திருகோணமலை துறைமுகத்திலுள்ள 14 எண்ணெய் கிடங்கை மட்டுமே 50 ஆண்டு காலத்திற்கு மீண்டும் இந்தியாவிற்கு குத்தகைக்கு கொடுத்துள்ளது.
இலங்கையின் கிழக்கு பகுதியில் வரலாற்று சிறப்புமிக்க பாதுகாப்பு அம்சங்களை கொண்ட திருகோணமலைத் துறைமுகம் அமைந்துள்ளது. இந்தத் துறைமுகத்தில் மொத்தமாக 99 எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் உள்ளது.
இந்த எண்ணெய் சேமிப்பு கிடங்குகளை வருடத்திற்கு ரூபாய் 75 லட்சம் கட்டணம் வாங்கி கொண்டு 35 ஆண்டு காலத்திற்கு இந்திய நிறுவனத்துக்கு இலங்கை அரசாங்கம் குத்தகைக்கு கொடுத்துள்ளது. ஆனால் குத்தகைக் காலம் முடியும் முன்பாகவே ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக இலங்கை அரசாங்கம் இரு தினங்களுக்கு முன்பாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் தொடர்ந்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் விளைவாக இலங்கை அரசாங்கம் மீண்டும் 50 ஆண்டு காலத்திற்கு திருகோணமலை துறைமுகத்தில் அமைந்துள்ள 14 எண்ணை கிடங்குகளை மட்டுமே இந்தியாவிற்கு குத்தகைக்கு கொடுத்துள்ளது.
இந்த தகவலை இலங்கை எரிசக்தி துறையின் அமைச்சரான உதய கமன்பில் தெரிவித்துள்ளார். மேலும் இவர் திருகோணமலையிலுள்ள 61 கிடங்குகள் இந்தியா மற்றும் சிலோன் நாட்டின் எண்ணை நிறுவனங்கள் கூட்டு ஒப்பந்த அடிப்படையில் பயன்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.