Categories
உலக செய்திகள்

“இந்தியா சீனாவிடம் கடனுதவியை பெற இலங்கை உத்தேசம்”.. இலங்கை அமைச்சர் வெளியிட்ட தகவல்…!!!!!

மின்சார கட்டன உயர்வை குறைப்பதற்கான தீர்வாக சோலார் பேனர்களை கொள்முதல் செய்வதற்கு இந்தியா அல்லது சீனாவின் கடன் உதவியை பெற இலங்கை உத்தேசத்திருப்பதாக அந்த நாட்டு அமைச்சர் காஞ்சன விஜேசேகர கூறியுள்ளார். இலங்கையில் ஏற்பட்டிருக்கிற கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக 2013 ஆம் வருடத்திற்கு பின் கடந்த ஆகஸ்ட் மாதம் மின்சார கட்டணம் சரியாக 75 சதவீதம் அதிகரிக்கப்பட்டது. இதனால் மாதாந்திர கட்டணம் தாங்க முடியாத அளவிற்கு ஏறி இருப்பதாக தெரிவித்த பௌத்த மத குருமார்கள் அரசுக்கு எதிராக போர் கொடியை தூக்கி உள்ளனர். மேலும் மின்சார கட்டணத்தை பொதுமக்கள் செலுத்த வேண்டாம் என தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று மின்சாரம் மற்றும் ஏரி சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர பேசியபோது, 48 ஆயிரத்திற்கும் அதிகமான நுகர்வோர் இணைப்புகள் மத ஸ்தலங்களுக்கு இருக்கின்றன. அவர்களில் 15000 மேற்பட்டவர்கள் மாதத்திற்கு 30 யூனிட்டுகளுக்கு குறைவாக பயன்படுத்துகிறார்கள். அதனால் கட்டண உயர்வால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. மேலும் எங்களுக்கு அன்னிய செலவாணி பிரச்சனை இருக்கிறது. இதனால் இறக்குமதி பணம் செலுத்துவது கடினம் மின்சார கட்டண உயர்வை குறைப்பதற்கான தீர்வாக சோலார் பேனர்களை கொள்முதல் செய்வதற்கு இந்தியா அல்லது சீனாவின் கடனுதவியை பெற இலங்கை உத்தேசித்திருக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |