தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, “பிரதமர் மோடி இந்தியாவை ரூ.375 லட்சம் கோடி மதிப்புள்ள பொருளாதார நாடாக உயர்த்தி காட்டுவேன் என்று பலமுறை உறுதியோடு கூறிவருகிறார். ஆனால் இந்தியாவோ தற்போது 7 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார வீழ்ச்சியை சந்தித்துள்ளது. மேலும் மத்திய பாஜக அரசு நாட்டில் நிலவுகின்ற பட்டினியையும், வறுமையையும் உச்சநீதிமன்றத்தில் மூடிமறைக்கின்ற செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றது.
அதோடு மட்டுமில்லாமல் 20 கோடி இந்தியர்கள் நாள்தோறும் வெறும் வயிற்றுடன் பசியோடு உறங்குகிறார்கள். அதேபோல் இந்தியர்கள் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பசியால் இறப்பதாக அதிர்ச்சி தகவலை ஹின்ட்ரைஸ் பவுண்டேஷன் வெளியிட்டுள்ளது. ஆனால் பிரதமர் மோடியின் நண்பர்களான அம்பானி, அதானி உள்ளிட்டோருக்கு பலமடங்கு சொத்துக்கள் கூடி கொண்டிருக்கிறது” என்று கடுமையாக சாடியுள்ளார்.