குஜராத் மோதேராவின் சூரிய கோயில் புஷ்பவதி நதிக்கு அருகில் அமைந்துள்ளது. இது சோலங்கி ஆட்சியாளர்களின் மரபையும் புகழையும் கட்டிடக் கலையையும் எடுத்துக்காட்டும் சின்னமாக உள்ளது. உலக அளவில் பிரபலமான சூரிய கோவில் குஜராத் மொதேரா கிராமத்தில் கடந்த 1026 to 27 ஆம் ஆண்டில் சாளுக்கிய வம்சம் மன்னர் பீமன் என்பவரால் கட்டப்பட்டது.
இந்த கோவிலை மையமாகக் கொண்டு கிராமத்தில் தற்போது சூரிய மின்சக்தி திட்டம் அறிமுகமாகியுள்ளது.சூரிய மின்சக்தி தயாரிப்பால் இனி அந்த கிராம மக்கள் தங்களுக்கு தேவையான மின்சாரத்தை சூரிய ஒளியிலிருந்து பயன்படுத்திக் கொள்வர். மீதமுள்ள மின்சாரத்தை விநியோகம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், மழை நாளில் இந்த கோயிலைக் காண்பது ஒரு அற்புதக் காட்சியாக இருக்கும்.