Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

இந்தியாவுக்கு 30% தான் வாய்ப்பு…. “அரையிறுதிக்கு செல்லுமா?”….. இப்படி சொல்லிட்டாரே முன்னாள் ஜாம்பவான்..!!

டி20 உலகக் கோப்பை அரையிறுதிக்கு ரோஹித் ஷர்மா தலைமையிலான அணிக்கு 30 சதவீத வாய்ப்புகள் மட்டுமே உள்ளதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் கருதுகிறார்.

2022 டி20 உலகக் கோப்பையில் டீம் இந்தியாவின் முதல் ஆட்டத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.  பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எதிராக சூப்பர் 12 சுற்றில் வரும் 23ஆம் தேதி இந்திய அணி விளையாடவுள்ளதை ரசிகர்கள் எதிர்நோக்கி இருக்கின்றனர்.. இன்னும் சில நாட்கள் தான் இருக்கிறது.. இந்தப் போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.

இதற்கிடையே இந்திய அணியின் முன்னாள் வீரர்களும், ஜாம்பவான்களான சச்சின் டெண்டுல்கரும், ரவி சாஸ்திரியும், அரையிறுதிக்குள் இந்திய அணி  எளிதாக முன்னேறும் தகுதி இருப்பதாக நினைக்கின்றனர். ஆனால், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் அப்படி நினைக்கவில்லை. அவரைப் பொறுத்தவரை, இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவு. முதல் 4 இடங்களுக்குள் வந்தால் மட்டுமே இந்தியாவின் வாய்ப்புகள் குறித்து கருத்து தெரிவிக்க முடியும் என்றார்.

லக்னோவில் நடந்த விளம்பர நிகழ்ச்சியில் கபில் தேவ் இதுகுறித்து கூறியதாவது, “டி20 கிரிக்கெட்டில், ஒரு போட்டியில் வெற்றி பெறும் அணி அடுத்த போட்டியில் தோல்வியடையும்.. இந்தியா உலகக் கோப்பையை வெல்லும் வாய்ப்புகளைப் பற்றி பேசுவது மிகவும் கடினம். பிரச்சனை அவர்கள் முதல் 4 இடங்களுக்குள் வர முடியுமா? மேலும் நான் கவலைப்படுகிறேன். அவர்கள் முதல் நான்கு இடங்களுக்குள் வந்தால் தான் எதையும் கூற முடியும். என்னைப் பொறுத்தவரையில், இந்தியா முதல் 4 இடங்களுக்குள் வருவதற்கு 30% வாய்ப்பு உள்ளது” என்று  கூறினார்.

இருப்பினும், விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் கே.எல் ராகுல் போன்ற நட்சத்திரங்களைக் கொண்ட இந்தியா ஒரு நல்ல பேட்டிங் தாக்குதலைக் கொண்டுள்ளது என்று கபில் கூறினார். விராட் கோலி, ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் ஆகியோரின் கூட்டணியில் சூர்யகுமார் போன்ற ஒரு பேட்டர் அணியில் இருப்பதால், ஒரு அணி தானாகவே வலுவடைகிறது என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |