இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருவதால், அமெரிக்க பெண்கள் இந்தியாவுக்கு தனியாக பயணம் மேற்கொள்ள வேண்டாம் என அமெரிக்க தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் தங்கள் நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான பயண ஆலோசனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சுற்றுலா தளங்கள் உட்பட பல்வேறு இடங்களில் கொடூரமான வன்முறைகள் மற்றும் பாலியல் பலாத்காரங்கள் அதிகரித்துள்ளது. எனவே அமெரிக்க சுற்றுலாப் பயணியர், குறிப்பாக பெண்கள் தனியாக இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று அரசு தெரிவித்துள்ளது.
Categories
இந்தியாவுக்கு யாரும் தனியா போகாதீங்க…. அரசு அறிவிப்பால் அதிர்ச்சி….!!!!
