Categories
தேசிய செய்திகள் விளையாட்டு

இந்தியாவுக்கு பெருமை… வெள்ளி வென்ற மாரியப்பன்… வெண்கலம் வென்ற ஷரத்… பிரதமர் மோடி வாழ்த்து..!!

வெள்ளி வென்ற மாரியப்பனுக்கும், வெண்கலம் வென்ற ஷரத்குமாருக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்..

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் 54 இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்
இப்போட்டியில் இந்தியாவுக்கு இதுவரை 2 தங்கம் உட்பட 8 பதக்கங்கள் கிடைத்துள்ளது..

இந்நிலையில் டோக்கியோ பாராலிம்பிக்கில் டி-42 பிரிவில் 1.86 மீ. உயரம் தாண்டி வெள்ளி வென்றார் தமிழ்நாட்டின் சேலம் மாவட்டம் வடுக்கம்பட்டியைச் சேர்ந்த வீரர் மாரியப்பன் தங்கவேலு.. அதேபோல 1.83 மீ. உயரம் தாண்டி பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்த சரத்குமார் வெண்கலப்பதக்கம் வென்றார்..

மாரியப்பனுக்கும், அமெரிக்க வீரர் கிரீவ் சாமுக்கும் கடும் போட்டி நிலவிய நிலையில், இறுதியாக இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம் கிடைத்துள்ளது.. கடைசி வரை தங்கத்துக்காக போராடினார் மாரியப்பன்.. இருப்பினும் வெள்ளி வென்று  இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.. 2016 ஆம் ஆண்டு ரியோ பாராலிம்பிக் போட்டியில் மாரியப்பன் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி வென்ற மாரியப்பனுக்கும், வெண்கலம் வென்ற சரத்குமாருக்கும் பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.. பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.. அதில், வெள்ளிப் பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு வாழ்த்துக்கள். அவரது சாதனையால் இந்தியா பெருமை கொள்கிறது என்று கூறியுள்ளார்..

மேலும் சரத்குமாருக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.. அதில், வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம் ஒவ்வொரு இந்தியரின் முகத்திலும் புன்னகையைக் கொண்டுவந்தார். அவரது வாழ்க்கை பயணம் பலரை ஊக்குவிக்கும். சரத்குமாருக்கு வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |