இந்தியாவுக்கான வங்காளதேசத்தின் அடுத்த உயர் ஆணையராக முஸ்தா பிசுர் ரஹ்மானை அந்நாட்டு அரசு நியமித்து இருக்கிறது. இதில் முஸ்தா பிசுர் ரஹ்மான் இப்போது ஜெனிவாவிலுள்ள ஐ.நா. சபையின் வங்காளதேசத்தின் நிரந்தரப் பிரதிநிதியாகவும், சுவிட்சர்லாந்திற்கான தூதராகவும் பணிபுரிந்து வருகிறார். அத்துடன் முன்பாக அவர் சிங்கப்பூருக்கான வங்காளதேச உயர் ஆணையராகவும் பணிபுரிந்துள்ளார்.
இந்நிலையில் இந்தியாவுக்கான வங்காளதேசத்தின் தற்போதைய உயர் ஆணையர் முஹம்மது இம்ரானுக்குப் பதில் எம்.டி. முஸ்தாபிசுர் ரஹ்மானை நியமிக்க அரசாங்கம் முடிவு செய்து உள்ளது என்று வங்காளதேச வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதனிடையில் இந்தியாவுக்கான வங்காளதேசத்தின் தற்போதைய உயர் ஆணையர் முஹம்மது இம்ரானை அமெரிக்காவுக்கான அடுத்த தூதராக வங்காளதேச அரசாங்கம் நியமித்து இருக்கிறது.