உலகம் முழுவதும் தற்போது கிரிப்டோ கரன்சி வர்த்தகம் மெல்ல மெல்ல சூடு பிடித்து வருகிறது. அதனால் பல நாடுகளும் டிஜிட்டல் கரன்சியை அறிமுகம் செய்து வருகின்றன. அவ்வகையில் இந்தியாவும் விரைவில் டிஜிட்டல் கரன்சியை அறிமுகம் செய்யும் என நீண்ட காலமாக ரிசர்வ் வங்கி கூறிவந்த நிலையில் அதற்கான முன்முயற்சியை மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில் டெல்லி உட்பட நான்கு முக்கிய நகரங்களில் டிஜிட்டல் கரன்சியை ரிசர்வ் வங்கி நாளை அறிமுகம் செய்கிறது. SBI, ICICI, Yes Bank, ITFC, FIRST Bank வங்கிகளில் செயல்பாட்டுக்கு வருகிறது. டிஜிட்டல் கரன்சியானது மக்களுக்கு நிதி பரிவர்த்தனைகளுக்காக மோசடி ஆபத்து இல்லாத மெய் நிகர் கரன்சியாக இருக்கும். இது காகித நாணயத்தை ஒத்தது. சாதாரண ரூபாயின் மதிப்பையே கொண்டிருக்கும். வெளியில் புலங்கும் கரன்சியின் மின்னணு வடிவமே இது என குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டில் கள்ள நோட்டுகளை ஒழிப்பதற்கு டிஜிட்டல் ரூபாய் பயன்படுத்தப்படும். அதே சமயம் ரூபாய் நோட்டுகள் அச்சடிவதற்கான செலவுகளும் குறையும். நிஜ ரூபாய் நோட்டுகள் சேதம் அடையும் ஆனால் டிஜிட்டல் ரூபாயை சேதப்படுத்த முடியாது.இதன் மூலம்24 மணி நேரமும் பரிமாற்றம் செய்து கொள்ள முடியும். அதோடு ரொக்க பணத்தை போல வங்கிகள் அல்லது ஏடிஎம்மில் சென்று பணம் எடுக்க வேண்டியதில்லை. இதற்காக கூடுதல் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை.