2030 ஆம் ஆண்டுக்குள் கால்நடைகளுக்கு ஏற்படும் நோய் முற்றிலும் கட்டுப்படுத்தப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நொய்டாவில் நடந்த உலகப் பால் வளர்ச்சி உச்சி மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி,கடந்த 8 ஆண்டுகளில் பால் உற்பத்தி 44 விழுக்காடு அதிகரித்திருப்பதால், விவசாயிகளுக்கு வருமானம் உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார். கால்நடைகளுக்கு ஏற்படும் தோல் கட்டி நோயை தடுக்க விஞ்ஞானிகள் தடுப்பூசி கண்டுபிடித்துள்ளது.
கால்நடைகளுக்கு வேகமாக பரவி வரும் நம்பி நோயை கட்டுப்படுத்த மாநிலங்களுடன் இணைந்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 2025 ஆம் ஆண்டுக்குள் அனைத்து கால்நடைகளுக்கும் கால் மற்றும் வாய்ப் புண், புரு செல்லா தடுப்பூசி 100% போடப்படும். 2030க்குள் இந்த நோய்களிலிருந்து கால்நடைகள் முற்றிலும் விடுபடுவதை இலக்காகக் கொண்டுள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்