ஆம்பியர் நிறுவனம் மின்சார இரண்டு சக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, மாநில அரசாங்கத்தின் மானியம் போன்றவை மின்சார வாகன விற்பனை அதிகரித்துள்ளது. இதைத்தொடர்ந்து ஆம்பியர் நிறுவனம் இந்தியா முழுவதும் ஒரு லட்சம் வாகனங்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.
எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை கடந்த சில வருடங்களில் பெரிய அளவில் முன்னேறி இருப்பதற்கு கொரோனா வைரஸ் பரவலினால் உருவாகியுள்ள அசாதாரண சூழலும் ஒரு காரணமாகும். ஏனென்றால் கொரோனா அச்சத்தால் பொது மக்கள் பலர் பொது பயன்பாட்டுக்கு வாகனங்களை பயன்படுத்த பயப்படுகின்றனர். இதுவே அவர்களை தங்களுக்கு சொந்த ஒரு வாகனத்தை வாங்க வைக்கிறது. அதிலும் குறிப்பாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரிப்பால் சொந்தமாக எலக்ட்ரிக் வாகனத்தையே வாங்கிக்கொள்ளலாம் என மக்கள் விரும்புகின்றனர்.