Categories
கொரோனா தேசிய செய்திகள்

இந்தியாவில் 1 கோடியை தாண்டிய கொரோனா..!!

இந்தியாவில்  கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியுள்ளது.

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 25 ஆயிரத்து 153 பேருக்கு புதிதாக கொரோனா  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 4 ஆயிரத்து 825 ஆக உயர்ந்துள்ளது. இதில் 3 லட்சத்து பத்தாயிரம் பேர் மருத்துவமணைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர். 95 லட்சத்து 50 ஆயிரத்து 712 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். உயிர் இழப்பை பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் 340 மரணமடைந்துள்ளதாகவும்,  மொத்த பலி எண்ணிக்கை 1,45,136 -ஆக  அதிகரித்து உள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |