Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் ஸ்மார்ட்போனை தாக்கும் புதிய வைரஸ்…. மத்திய அரசு எச்சரிக்கை….!!!!

நாடு முழுவதும் மக்களை ஏமாற்றி பலரும் நூதன மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். மக்களுக்கு குறுஞ்செய்திகள் மற்றும் செல்போன் மூலமாக தொடர்பு கொண்டு ஏதாவது ஒன்றை கூறி, மக்களை நம்ப வைத்து அவரின் வங்கி கணக்குகள் உள்ளிட்ட விவரங்கள் அனைத்தும் திருடப்படுகின்றன. அதனால் பெரும்பாலான மக்கள் பணத்தை இழந்துள்ளனர். இதுபோன்ற மோசடி நபர்களிடம் மக்கள் ஏமாறாமல் இருக்க வேண்டும் என்று சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் டிரிங்க் என்ற புதிய வைரஸ் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் ஊடுருவி 27 இந்திய வங்கிகள் உள்ளிட்ட விவரங்களை திருடுவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. வருமான வரித்துறை அனுப்புவது போல், போலி குறுஞ்செய்தியை ஹேக்கர்கள் அனுப்புகின்றனர். குறுஞ்செய்தியில் உள்ள லிங்கில் நுழைந்தவுடன் புதிய ஆப் டவுன்லோட் ஆகும். அந்த ஆப் மூலம் ஆதார் எண், டெபிட் கார்டு விவரங்கள் உள்ளிட்டவை திருட படுவதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Categories

Tech |