Categories
உலக செய்திகள்

இந்தியாவில் வரும் டிசம்பர் மாதத்திற்குள் கொரோனா தடுப்பூசி ….!!

இந்தியாவில் வரும் டிசம்பர் மாதத்திற்குள் கொரோனா தடுப்பூசி தயாராகிவிடும் என சீரம் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

உலகின் பல்வேறு நாடுகளும் கொரோனாக்காக தடுப்பூசியை கண்டு பிடிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர். ஒரு சில நாடுகளில் தடுப்பூசி பரிசோதனை இறுதிக் கட்டத்தில் உள்ள நிலையில் ரஷ்யாவில் பயன்பாட்டிற்கு வந்துள்ள தடுப்பூசி குறித்து ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளனர். இதனிடையே இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் அந்நாட்டு அரசு மற்றும் அஸ்ட்ரா ஜெனிகா நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பு மருந்து அதிக நம்பகத்தன்மை அளிப்பதாக கூறப்படுகிறது.

இதனை இந்தியாவில் தயாரிக்க ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்துடன் மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள இந்திய சீரம் இன்ஸ்டிட்யூட் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த தடுப்பூசி இந்தியாவில் வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் தயாராகி விடும் என்றும் அதன் விலை தலா ஆயிரம் ரூபாயாக இருக்கும் என்றும் சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது.

Categories

Tech |