Categories
பல்சுவை

இந்தியாவில் வந்தாச்சு சாம்சங் கிரெடிட் கார்டு….. இதில் இவ்வளவு சலுகைகளா?…. உடனே வாங்குங்க….!!!!

இந்தியாவில் எலக்ட்ரானிக் நிறுவனமான சாம்சங் தனது முதல் கிரெடிட் கார்டை தற்போது அறிமுகம் செய்துள்ளது. இதற்காக ஆக்ஸிஸ் வங்கி மற்றும் விசா நிறுவனத்துடன் சாம்சங் நிறுவனம் இணைந்துள்ளது.சாம்சங் நிறுவனத்தின் இந்த கிரெடிட் கார்டு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்கும் போது பத்து சதவீதம் கேஷ் பேக் சலுகை கிடைக்கும்.அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே வழங்கப்பட்ட வரும் இதர சலுகைகளைத் தவிர கூடுதலாக பத்து சதவீதம் கேஷ் பேக் சலுகை கிடைக்கும்.

அதே சமயம் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் மொபைல் வாங்கிய பின்னர் 12 மாதங்களில் புதிய மொபைலுக்கு மாறுவதாகவும், அப்படிப்பட்ட வாடிக்கையாளர்கள் பணத்தை சேமிப்பதற்கு இந்த கிரெடிட் கார்டு மிக உதவியாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கிரெடிட் கார்டுக்கான ஆண்டு கட்டணம் signature variant500 ரூபாய் மட்டும் இன்ஃபினிட்டி வெரியண்டுக்கு ஐந்தாயிரம் ரூபாய்.

இதில் வாடிக்கையாளர்கள் பத்தாயிரம் ரூபாய் வரை வருடத்திற்கு கேஸ் பேக் சலுகைகளை பெற முடியும். பிக் பாஸ்கெட், மித்ரா, zomato ஆகிய தளங்களில் சாம்சங் கிரெடிட் கார்டு பயன்படுத்தும் அனைவருக்கும் ரிவார்டுகள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே விமான நிலையங்களில் lounge வசதியும் பயன்படுத்திக் கொள்ளலாம். குறிப்பாக பெட்ரோல் மற்றும் டீசல் போடும்போது கூடுதல் கட்டணம் தள்ளுபடி, உணவகங்களில் சலுகைகளும் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |