டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று காலை 11 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதன் பிறகு மத்திய அமைச்சர் அனுராக் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், பிரதமரின் கரீப் கல்யாணம் யோஜனா திட்டத்தை நீடித்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் ரேஷன் அரிசி திட்டத்தில் இலவச உணவு தானியம் வழங்கும் திட்டத்தை மேலும் 3 மாதத்திற்கு நீடித்துள்ளது.
அதனை தொடர்ந்துஅகமதாபாத் மற்றும் மும்பை ஆகிய மூன்று ரயில் நிலையங்களை மீண்டும் மேம்படுத்துவதற்கான இந்திய ரயில்வேயின் முன்மொழிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டம் ரூ.10,000 கோடி முதலீட்டு ஒதுக்கி உள்ளது. இதன் மூலம் டெல்லி, மும்பை, அகமதாபாத் ரயில் நிலையங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.