இந்தியாவில் கொரோணா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தற்போது தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் தற்போது கோவாக்சின் , கோவிஷில்டு தடுப்பூசிகள் போட பட்டு வருகின்றது.
இந்நிலையில் இந்தியாவில் அவசரகால தேவைக்கு ஜான்சன் & ஜான்சன் நிறுவன கொரோனா தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அமெரிக்காவில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் கொரோனா தடுப்பூசியை உருவாக்கி, பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது. இந்த தடுப்பூசி ஒரு டோஸ் ஆகும். இந்த மருந்தை இந்தியாவில் பயன்படுத்த அனுமதி கோரி ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. முதலில் அவசர காலத் தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்த அனுமதி கேட்டிருந்தது. இந்நிலையில் இந்த தடுப்பூசியை அவசர காலத் தேவைகளுக்கு பயன்படுத்த அனுமதி வழங்கப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.