ஜேம்ஸ் கேமரூனின் பிரம்மாண்ட இயக்கத்தில் அவதார் ஃபுல் திரைப்படம் கடந்த வாரம் உலகம் முழுவதும் 160 மொழிகளில் 55 ஆயிரம் திரையரங்குகளில் வெளியானது. கதை மற்றும் திரைக்கதையின் அடிப்படைக் கலவையான வரவேற்பை பெற்றாலும் பாக்ஸ் ஆபீஸ் இல் திரைப்படம் மிகப்பெரிய சாதனையை படைத்து வருகின்றது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் சுமார் 3,600 கோடி ரூபாய் வசூல் சாதனை படைத்துள்ளதாக திரையுலக வர்த்தக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் மூன்று நாட்களுக்குள் மற்றொரு ஹாலிவுட் படமான டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் மொத்த வசூல் சாதனையையும் முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இந்த திரைப்படம் வெளியான நிலையில் இந்தியாவில் மட்டும் 133 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய அளவில் 126 கோடி ரூபாய் வசூல் செய்து அதிக வசூல் செய்த ஹாலிவுட் படம் என்ற பெருமையை டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் பெற்றுள்ளது. அந்த சாதனையை அவதார் வெறும் மூன்று நாட்களில் முறியடித்து மேலும் பல சாதனைகளை நோக்கி படை எடுத்துக் கொண்டிருக்கிறது.