Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா…. WHO வெளியிட்ட எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

இந்தியாவில் சென்ற சில வருடங்களாக கொரோனா தொற்றினால் மக்கள் அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டு தங்களின் இயல்பு வாழ்க்கையை இழந்து சிரமத்திற்கு ஆளாகினர். அத்துடன் எண்ணிலடங்காத இறப்புகளும் ஏற்பட்டது. இப்போது கொரோனா நோயின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. அதுமட்டுமின்றி மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு மெதுவாக திரும்பி கொண்டிருக்கின்றனர். இதனிடையில் கொரோனாவின் 2ஆம், 3ஆம் அலைகளையும் மக்கள் கடந்து வந்துள்ளனர்.

தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டும், தடுப்பூசிகள் மக்களிடம் சரியான முறையில் சென்றடையுமாறும் வழிவகை செய்துள்ளது. இந்தநிலையில் அடுத்தடுத்த கொரோனா அலைகளுக்கு நாம் தயாராக இருக்க வேண்டுமென உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சௌமியா சுவாமிநாதன் தெரிவித்து இருக்கிறார். அத்துடன் புதியதாக உருமாற்றமடையும் கொரோனா மக்களிடையே மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும் எனவும் உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இனி உருமாற்றமடையும் கொரோனா பிஏ.4 மற்றும் பிஏ.5 மாறுபாடுகள் தடுப்பூசி போட்டவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தகூடும் என்று தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அடுத்தடுத்து வரும் கொரோனா அலைகளை நாம் சமாளிக்க தயாராக இருக்க வேண்டுமென்று அறிவுறுத்தி இருக்கிறது. அடுத்து வரக்கூடிய கொரோனா அலைகள் வேகமாக பரவக்கூடியதாகவும், தடுப்பூசிகளின் நோய்எதிர்ப்பு திறனை தவிர்க்க கூடியதாகவும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த சூழ்நிலையில் பல்வேறு மாதங்களாக குறைந்துவந்த கொரோனா பரவல் மீண்டுமாக அதிகரிக்க தொடங்கி இருக்கிறது.

இதனால் இறப்புகள் அதிகரிக்ககூடும் என்று உலக வங்கியின் மூத்த ஆலோசகர் பிலிப் ஷெல்கென்ஸ் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி இந்த கொரோனா பரவல் வளர்ந்துவரும் நாடுகளில் மட்டுமல்லாது வளர்ந்த நாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மன் மற்றும் ஜப்பான் ஆகிய பெரிய நாடுகளில் அதிகளவு பாதிப்பினை ஏற்படுத்த தொடங்கி இருக்கிறது. இதனிடையே பிஏ.4 மற்றும் பிஏ.5 வகை கொரோனா உலகில் பல்வேறு நாடுகளிலும் வேகமாக பரவிவருகிறது. இதனால் அதிகளவு மக்களுக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படும் நிலை ஏற்படும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கூறியுள்ளார். ஆகவே மக்கள் அனைவரும் தகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளது.

Categories

Tech |