Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் ஜெட் வேகத்தில் உயரும் ஒமைக்ரான் பாதிப்பு…. மத்திய சுகாதாரத்துறை….!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தென்னாபிரிக்காவின் கொரோனா வைரஸ் ஒமைக்ரான் என்ற புதிய வைரஸ் உருமாறி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. அதன்படி இந்தியாவிலும் ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. மத்திய சுகாதார அமைச்சகத்தின் தகவலின்படி, கடந்த 2-ஆம் தேதி கர்நாடகாவில் ஒமைக்ரான் பாதிப்பு முதல்முறையாக உறுதி செய்யப்பட்டது.

அதன்பிறகு 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பரவி வருகிறது. தற்போது நாட்டிலும் ஒமைக்ரான் பாதித்த மொத்த எண்ணிக்கை 422 ஆக உள்ளது. அதில் அதிகபட்சமாக மராட்டியத்தில் 108 பேர், டெல்லியில் 79 பேர் மற்றும் குஜராத்தில் 49 பேர் ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனை தொடர்ந்து தெலுங்கானாவில் 41 பேர், கேரளாவில் 38 பேர், தமிழ்நாட்டில் 34 பேர் மற்றும் கர்நாடகம் 31 பேருக்கும்  ஒமிக்ரான் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இதுவரை ஒமைக்ரான் பாதிப்பில் இருந்து 130 பேர் குணமடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |