Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் உருமாறிய கொரோனா… பாதிப்பு எண்ணிக்கை 20 ஆக உயர்வு… அதிர்ச்சி…!!!

இந்தியாவில் உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனா வின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸால் உலக நாடுகள் அனைத்தும் அச்சமடைந்துள்ளனர்.

இந்நிலையில் இந்தியாவில் உருமாறிய கொரோனா பரவி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் இருந்து இந்தியா வந்த ஆறு பேருக்கு நேற்று உருமாறிய கொரோனா உறுதியான நிலையில், இன்று புதிதாக 14 பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 2 வயது பெண் குழந்தை உட்பட 14 பேருக்கு உருமாறிய கொரோனா உறுதியானதை அடுத்து, அனைவரும் தனித்தனி அறைகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Categories

Tech |