Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் இருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது – மத்திய அரசு தகவல்!

இந்தியாவில் இருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சீனாவில் கடந்த இரண்டு மாதங்களாக பரவு கொரோனா வைரஸ் அந்நாட்டையே ஒரு வழியாக்கியுள்ளது.
சீனாவில் மட்டுமே கொரோனாவல் 2,912 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் மட்டுமே கொரோனாவல் 2,912 பேர் உயிரிழந்துள்ளனர். எனினும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் உயிரிழப்புகள் சீனாவில் குறைந்து வருவதாக தெரியவருகிறது.

எனினும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் உயிரிழப்புகள் சீனாவில் குறைந்து வருவதாக தெரியவருகிறது. சீனாவை தொடர்ந்து 50க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. சீனாவில் உயிரிழப்பு விகிதங்கள் குறைந்தாலும் இத்தாலி, தென் கொரியா, ஈரான் உள்ளிட்ட நாடுகளில் உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.

உலகளவில் கொரோனா வைரஸால் 3000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இத்தாலியிலிருந்து டெல்லி வந்த ஒருவருக்கும், துபாயில் இருந்து தெலங்கானா வந்த ஒருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பாதித்த இருவரையும் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், இருவரும் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது.

கேரளாவில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் பாதித்த இரண்டு பேர் சிகிச்சை பெற்று பூரண குணம் அடைந்து வீடு திரும்பிய நிலையில், தற்போது இந்தியாவில் இருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் செய்தி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் பாதித்த இருவரின் உடல்நிலையும் தற்போது சீராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |