வேளாண் வருவாயை அதிகரிப்பதற்கு அரசாங்கமும், விவசாய சங்க தலைவர்களும் வேறு வழியை யோசிக்க வேண்டும் என்று நிபுணர் குழு உறுப்பினர் கேட்டுக்கொண்டுள்ளார்.
வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்த பிறகும் விவசாயிகள் தங்களுடைய போராட்டத்தை திரும்பப் பெறாமல், பல்வேறு கோரிக்கையை முன்வைத்துள்ளனர். அதில் குறிப்பாக குறைந்தபட்ச ஆதரவு விலையில் வேளாண் பொருட்களை கொள்முதல் செய்வதற்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றனர்.
ஆனால் இந்த விஷயத்தில் அரசு என்ன முடிவு செய்யப் போகிறது என்பது தெரியவில்லை. மேலும் வேளாண் சட்டங்கள் தொடர்பாக மத்திய அரசு மற்றும் விவசாயிகளுக்கு இடையே பல்வேறு கட்டங்களாக நீடித்த பேச்சுவார்த்தை பயனளிக்காததால், பேச்சுவார்த்தையை நடத்துவதற்கு 4 பேர் கொண்ட குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்துள்ளது. இதுபற்றி அந்த குழுவில் உள்ள அனில் கன்வத் பேசுகையில், குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்பான சட்டம் இயற்றப்பட்டால் இந்தியா நெருக்கடிக்கு ஆளாகும் என்று கூறியுள்ளார்.
மேலும் வேளாண் வருவாயை அதிகரிப்பதற்கு அரசாங்கமும், விவசாய சங்க தலைவர்களும் வேறு வழியை யோசிக்க வேண்டும். மேலும் குறைந்தபட்ச ஆதரவு விலை ஒரு நிரந்தரமான தீர்வு அல்ல எனவே விவசாயிகளுக்கு மட்டுமல்லாமல் வியாபாரிகளுக்கும், இருப்பு வைக்கும் மொத்த வியாபாரிகளுக்கும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று கன்வத் தெரிவித்துள்ளார்.