Categories
பல்சுவை

இந்தியாவில் ஆடி Q3 கார்…. இவ்வளவு சிறப்பம்சங்கள் இருக்கா?…. இதோ முழு விபரம்….!!!!

இந்தியாவில் சொகுசுகார்களை வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்களுக்காக பல்வேறு வசதிகளைக் கொண்டுள்ள நிறுவனம்தான் ஆடி(audi). இப்போது வரை கார் விற்பனையில் முன்னணி நிறுவனமாக இயங்கி வருகிறது. இந்த நிலையில் ஆடி நிறுவனம் தனது பிரபல எஸ்யுவி காரான Q3 காரை சிங்கிங் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனுடன் 2 புது வேரியண்ட்களில் அறிமுகம் செய்துள்ளது. உலகம் முழுதும் சென்ற 2019ம் வருடம் முதல் விற்பனை செய்யப்பட்டு வந்தாலும் கொரோனா பாதிப்பு காரணமாக இந்தியாவில் வெளியாகாமல் இருந்தது. தற்போது இந்தியாவில் ஆடி Q3கார் பிரீமியம் பிளஸ் மற்றும் ஆடி Q3Technology போன்ற 2வேரியண்ட்களில் கிடைக்கிறது. ஆடிநிறுவனம் மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் இப்போது அறிமுகம் செய்துள்ள காரை முன் பதிவு செய்யும் முதல் 500 வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகள் மற்றும் வசதிகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. தற்போது இதன் அம்சங்கள் மற்றும் விலை நிலவரம் பற்றி தெரிந்துகொள்வோம்.

ஆடி Q3 காரின் அம்சங்கள்

காரில் 2.0 லிட்டர் TFSI என்ஜின் வசதியுடன் 190 BHP மற்றும் டார்க் 320 NM டார்க்வசதியும் இருக்கிறது. அதிலும் குறிப்பாக இந்த பிரீமியம் காரில் ஆல்வீல் டிரைவிங் வசதியுடன் 100 கி.மீ வேகத்தை 7.3 வினாடிகளில் அடைந்து விடும். வாடிக்கையாளர்களைக் கவரும் அடிப்படையில் Audi Q3 காரில் LED ஹெட் லேம்ப்வசதி, LED டைல்லேம்ப், DRLS வசதி, 18 இன்ச் அலாய் வீல், அலுமினியம் இன்ஸெர்ட், வெளிப்புற மிரர், மின்னியல் ரீதியாக சரிசெய்யக்கூடிய முன் இருக்கைகள் மற்றும் முழுடிஜிட்டல் Audi விர்ச்சுவல் காக்பிட், 30 வண்ண சுற்றுப்புற விளக்குகள் ஆகியவை இடம்பெற்றுள்ளது. மேலும் ப்ளுடூத்வசதி, 6 ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம், எலெக்ட்ரோ மெக்கானிக்கல் பவர் ஸ்டேரிங் வீல், வயர்லெஸ் சார்ஜிங், ஆம்பிஎண்ட் லைட்டிங் ஆகியவை இடம்பெற்றுள்ளது. இது தவிர்த்து லெதர்சீட் வசதி, ரியர் சீட் அட்ஜெஸ்ட் வசதி, லெதர் 3 ஸ்போக் ஸ்டேரிங் வீல், பேடல் ஷிப்ட்டர் ஆகிய பல வசதிகள் இடம்பெற்றுள்ளன. இது போன்று பல அம்சங்கள் மட்டுமல்லாது ஆடிQ3காரில் பாதுகாப்புவசதிகளும் அதிகளவில் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக ஹில் ஸ்டார்ட் அஸ்சிஸ்ட், ஸ்டார்ட், ஸ்டாப் சிஸ்டம் வசதி, ரிஜெனெரேட்டிவ் பிரேக்கிங், ரியர் கேமரா, கிருஷ் கண்ட்ரோல், 6 ஏர் பேக், சைடு ஏர் பேக் ஆகிய பல வசதிகள் இடம் பெற்றுள்ளது.

Audi Q3காரின் விலை நிலவரம்

இந்தியாவில் ஆடிQ3 பிரீமியம் பிளஸ் ரூ.44.89 லட்சம், ஆடிQ3 டெக்னாலஜி காரின் விலையானது ரூ.50.39 லட்சம் என்று நிர்ணயம்செய்யப்பட்டிருக்கிறது. இவ்வாறு பல அம்சங்கள் அடங்கிய Audi Q3 காரின் டெலிவரிகள் சென்ற 2022 ஆம் வருடத்தின் இறுதியில் தொடங்கும் என Audi India தெரிவித்துள்ளது. அத்துடன் சொகுசு கார்களான SUV Mercedes-Benz GLA, BMW X1 மற்றும் Volvo XC40 போன்ற மாடல்களுக்கு போட்டியாக Audi Q3 விற்பனைக்கு வர உள்ளதாகவும் Audi கார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |