Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் அதிகரித்து வரும் தற்கொலைகள்… பின்னணி என்ன….? என் சி ஆர் பி வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை…!!!!!

இந்தியாவில் அதிகரித்து வரும் தற்கொலைக்கான காரணங்கள் என்ன என்பது குறித்து ncrb அதிர்ச்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

நாட்டில் தற்கொலைகள் மூலம் 2021 ஆம் வருடம் நடத்தப்பட்ட உயிரிழப்பு பற்றி ncrb அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில் தற்கொலைகள் பற்றி கூறப்பட்டிருப்பதாவது, இந்தியாவில் கடந்த 2019 முதல் 21 ஆம் வருடத்தில் சமீபத்திய அறிக்கையின் படி 54 வருடங்களில் 17.56 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் உட்பட 4.7 கோடி பேர் தற்கொலை செய்து கொள்வதற்காக பல்வேறு வழிகளை பயன்படுத்தி தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொண்டிருக்கின்றனர் என தேசிய குற்ற ஆவண காப்பகம் கூறியுள்ளது. இதில் தற்கொலைக்கான காரணங்களில் பிரதானமாக கூறப்படுவது குடும்ப பிரச்சினைகள் மற்றும் நோய்களால் ஏற்பட்ட விரக்தியே தற்கொலைக்கு தோன்றுகிறது. இந்த நிலையில் தேசிய ஆவண காப்பகத்தின் 2019 21 சமீபத்திய அறிக்கையின்படி 54 வருடங்களில் 17.56 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் உட்பட 4.7 கோடி பேர் தற்கொலைக்கு பல்வேறு வழிகளில் தங்களது வாழ்க்கையை முடித்து இருக்கின்றனர்.

2020 ஆம் வருடம் 88,460 பேரும் 2021ல் 93581 பேரும் அதிகபட்சமாக மின்விசிறிகள் மற்றும் கூரைகளில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருந்தாலும் மொத்த தற்கொலைகளில் 58 சதவீதத்திற்கும் அதிகமானோர் இந்த முறையிலே தங்களது வாழ்க்கையை முடித்து இருக்கின்றனர். இந்த நிலையில் தேசிய ஆவண காப்பகம் அறிக்கையில் இருந்து வெளியிடப்பட்ட ஒரு திடுக்கிடும் தகவல் என்னவென்றால் இந்தியாவில் 1998 ஆம் வருடம் முதல் 43,27 பெண்கள் உட்பட 104,713 பேர் தற்கொலை செய்து கொண்டதிலிருந்து தற்கொலை விகிதம் ஆபத்தான விகிதத்தில் இருந்துள்ளது. தற்கொலைகளின் அதிகரிப்பு விகிதம் 1998 முதல் செங்குத்தாக அதிகரிக்க தொடங்கியுள்ளது என ncrb வட்டாரம் கூறியுள்ளது.

மேலும் அந்த வருடம் முதல் தற்கொலைகளின் எண்ணிக்கை ஆறு இலக்கங்களுக்கு சென்று இருக்கின்றது. 2009இல் முந்தைய வருடங்களில் சில சிறிய மாறுபாடுடன் தற்கொலைகளின் எண்ணிக்கை 110,587 ஆக அதிகரிக்கிறது என அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் 2014 மற்றும் 21 ஆம் வருடத்திற்கு இடையில் 310 திருநங்கைகள் தற்கொலை செய்து கொண்டிருப்பதாகவும் 2021 ஆம் வருடத்தில் 28 திருநங்கைகள் உயிரிழந்திருக்கின்றனர். அதனை தொடர்ந்து 2020 ஆம் வருடம் 22 பேர், 2019 ஆம் வருடம் 17 பேர் மற்றும் 2018 ஆம் வருடம் 11 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இந்த நிலையில் தற்கொலைக்கான மோசமான வருடமாக 2021 ஆம் வருடம் பார்க்கப்படுகின்றது. 2021 ஆம் வருடம் தமிழ்நாட்டில் 33 தற்கொலைகள் மற்றும் குடும்ப தற்கொலைகள் பதிவாகி இருக்கின்றது. அதனை தொடர்ந்து ராஜஸ்தான் 25, ஆந்திரத்தில் 22, கேரளத்தில் 12 மற்றும் கர்நாடகத்தில் பத்து வழக்குகள் பதிவாகி இருக்கிறது. மேலும் தமிழகத்தில் 33 வழக்குகளில் 80 தற்கொலைகள் நடைபெற்றுள்ளது என தேசிய குற்ற ஆவண காப்பகம் கூறியுள்ளது.

Categories

Tech |