Categories
தேசிய செய்திகள்

இந்தியாவிலேயே முதன்முறையாக புது தொழில்நுட்பத்தில்…. ஜொலிக்கப்போகும் பாம்பன் பாலம்…. மத்திய அரசு அதிரடி…!!!!

இந்தியாவின் பிரசித்தி பெற்ற புனித தலங்களில் ஒன்றான ராமேஸ்வரம் பாம்பன் தீவில் தான் அமைந்துள்ளது. இந்தியா முழுவதும் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் பாம்பன் பாலத்தை கடந்து தான் ராமேஸ்வரத்தை அடைய முடியும். பார்ப்பவர்களை பரவசத்தில் ஆழ்த்தும் பாம்பன் ரயில்வே தூக்கு பாலம் நூறு ஆண்டுகளை கடந்து ரம்மியமாக காட்சியளிக்கிறது. இந்த பாலத்தை கடந்து செல்கிறவர்கள் கடல் அலையின் அழகின் அழகை கண்டு ரசித்து செல்வார்கள். இந்த பாலம் ராமநாதபுரத்தின் ஒரு அடையாளம் என்று சொல்லலாம்.

ராமேஸ்வரத்தில் புதிய பாம்பன் பாலம் கட்டப்பட்டு வருகிறது. ஏற்கனவே இருந்த ரயில்வே பாலம் பழமையானதை தொடர்ந்து புதிய ரயில்வே பாலம் கட்டப்பட்டு வருகிறது. பாலத்தில் புதிய அம்சமாக படகுகள் சென்றுவர செங்குத்தான ரயில்வே லிப்ட் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த தொழில்நுட்பம் இந்தியாவிலே முதன்முறையாக உள்ள நிலையில், பாலத்தின் பணிகள் 81% நிறைவுபெற்றுள்ளதாக அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ தெரிவித்துள்ளார்.

Categories

Tech |