Categories
உலக செய்திகள்

இந்தியாவிலிருந்து வருபவர்களுக்கு தடை.. பிரபல நாடு அறிவிப்பு..!!

அமெரிக்கா, வரும் மே 4 ஆம் தேதியிலிருந்து இந்தியாவிலிருந்து தங்கள் நாட்டிற்கு வரும் பயணிகளுக்கு தடை விதித்திருக்கிறது. 

இந்தியாவில் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. எனவே அமெரிக்க அரசு, தங்கள் குடிமக்களை இந்தியாவிற்கு செல்வதை தவிர்க்குமாறு வலியுறுத்தியுள்ளது. இதனிடையே இந்தியாவிலுள்ள அமெரிக்க மக்கள் உடனடியாக நாடு திரும்புமாறு அமெரிக்க வெளியுறவுத்துறை கூறியுள்ளது.

இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளதாவது, இந்தியாவில் கொரோனா தீவிரமடைந்து இருப்பதால் எல்லா வகையான மருத்துவ சேவைகள் பெறுவதில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே இந்தியாவிலுள்ள அமெரிக்க மக்கள் தங்களால் முடிந்த அளவிற்கு உடனடியாக வெளியேறுவது தான் பாதுகாப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியாவிலிருந்து, நாட்டிற்கு திரும்ப விரும்பும் அமெரிக்க மக்கள் தற்போது கிடைக்கும் வணிகப் போக்குவரத்தை பயன்படுத்துமாறு தெரிவித்திருக்கிறது. இதனைத்தொடர்ந்து வரும் மே மாதம் 4ஆம் தேதி தொடங்கி இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு செல்ல தடை போன்ற விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால் அமெரிக்க குடிமக்களுக்கும், நிரந்தர குடியுரிமை பெற்றிருப்பவர்களுக்கும் இதில் விலக்கு அளிக்கப்படுகிறது என்று வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.

Categories

Tech |