சீனாவின் சாட் வீடியோ செயலியான டிக் டாக் மீண்டும் இந்தியாவிற்குள் நுழைவதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
சீன வீடியோ பகிர்வு சேவையான டிக்டாக் நாட்டின் தகவல் பாதுகாப்பு காரணங்களுக்காக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தடை செய்யப்பட்டது. இந்நிலையில் டிக்டாக் நிறுவனம் தற்போது மீண்டும் இந்தியாவிற்குள் தனது சேவையை தொடங்க உள்ளதாக கூறப்படுகின்றது. அதனால் முன்னாள் ஊழியர்களை மீண்டும் வேலைக்கு அமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக கிடைத்த தகவலின்படி டிக்டாக்கின் தாய் நிறுவனமான பைட் டான்ஸ் மீண்டும் இந்தியாவில் நுழைய விரும்புவதாக கூறப்படுகிறது. உள்நாட்டு நிறுவனத்துடன் இணைந்து மீண்டும் இந்தியாவிற்குள் நுழைய உள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்தியாவில் 2021 ஆம் ஆண்டு டிக்டாக் சேவை தடை செய்யப்பட்டது. ஆனால் ஒரு வருடத்திற்கு பிறகு தான் அந்த நிறுவனம் அதன் செயல்பாடுகளை காலி செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் சீனாவை சேர்ந்த 60 செயலிகளுக்கு தடை விதித்த போது இந்த டிக்டாக்கும் தடை செய்யப்பட்டது. இதனால் இந்த முறை தடையை தவிர்ப்பதற்காக இந்திய நிறுவனமான ஹிராநந்தினி குழுமத்துடன் இணைந்து மீண்டும் நுழையவுள்ளதாகக் கூறப்படுகின்றது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.