மங்கையராக பிறப்பதற்கு மாதவம் செய்திட வேண்டும் என கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை பாடியிருக்கிறார். எனினும் மாதவம் புரிந்து பிறந்துள்ள பெண்கள் பலரும் இன்றைய சமூகத்தில் சமமாகவும், மரியாதைையுடனும் நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் தைரியத்தையும், நம்பிக்கையும் ஆயுதமாக வைத்து பெண்கள் இந்திய வரலாற்றில் வியக்கத்தக்க பல்வேறு செயல்களை செய்து வருகின்றனர். இன்றைய காலக்கட்டத்தில் பெண்கள் பல துறைகளில் கால்பதிக்க தொடங்கியுள்ளனர். அந்த அடிப்படையில் சமூகத்தில் மாற்றம் ஏற்படுத்திய பெண்களும் இருக்கின்றனர்.
அதன்படி இந்தியாவின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி யார் மற்றும் அவர் குறித்த சில குறிப்புகளை பற்றி நான் தெரிந்து கொள்வோம். கடந்த 1949 ஆம் வருடம் ஜூன் 9ஆம் தேதி கிரண்பேடி பிறந்தார். இவர் ஒரு இந்திய அரசியல்வாதி, சமூக சேவகர் மற்றும் ஓய்வுபெற்ற காவலர் ஆவார். அத்துடன் கிரண்பேடி இந்திய காவல்பணியில் கடந்த 1972 ஆம் வருடம் சேர்ந்த முதல் பெண் அதிகாரி ஆவார். மேலும் கிரண்பேடி தில்லி, கோவா மற்றும் மிசோரம் போன்ற இடங்களில் பணிபுரிந்துள்ளார்.
இதையடுத்து 1971 ஆம் வருடத்தில் ஆசிய பெண்கள் டென்னிஸ் போட்டியில் இவர் வெற்றி பெற்றார். அதன்பின் 1993ல் கிரண்பேடி தில்லி சிறைச்சாலைகளுக்கு பொது ஆய்வாளராக இருந்தபோது திகார் சிறைகளில் இவர் ஆற்றிய சீர்திருத்தங்கள் பலரின் பாராட்டை பெற்றதோடு, 1994 ஆம் வருடத்திற்கான ரமோன் மக்சேசே விருது பெற ஏதுவாய் இருந்தது. அதனை தொடர்ந்து 2007 ஆம் வருடம் கிரண்பேடி விருப்பப்பணி ஓய்வுபெற்றார். சென்ற 2011 ஆம் ஆண்டு நடந்த இந்திய லஞ்ச ஒழிப்பு இயக்கத்தில் இவர் குறிக்கத்தக்க பங்கு வகித்தவர் ஆவார்.
அதுமட்டுமின்றி கிரண்பேடி பாரதிய ஜனதா கட்சியில் ஜனவரி 2015 ஆம் வருடம் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக 2016 ஆம் வருடம் மே 29-ல் புதுச்சேரிமாநில துணை நிலை ஆளுநராக கிரண்பேடி பொறுப்பேற்று 16 பிப்ரவரி 2021 ஆண்டு வரை அந்தப் பதவியில் நீடித்தார். அத்துடன் கிரண்பேடி நலவாழ்வு மற்றும் குற்றத்தடுப்பு காவல் தொடர்பாக 1987 ஆம் வருடம் நவ்ஜோதி என்ற அமைப்பையும், சிறை சீர்திருத்தங்கள், போதை மருந்து தடுப்பு மற்றும் சிறுவர் நலம் குறித்து 1944 ஆம் வருடம் இந்தியாவின் பவுண்டேஷன் என்ற அமைப்பையும் நிறுவி இருக்கிறார். மேலும் கிரண்பேடி எழுதிய ஆங்கிலநூல்கள் நான் துணிந்தவள், ஊழலை எதிர்த்து தலைமையும் ஆளுமையும், இந்திய காவல்துறை, பெண்களுக்கு அதிகாரம், இது எப்போதும் இயலும் மற்றும் புரூம் குரூம் ஆகும்.