இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயம் கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் அமைய உள்ளது.
இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயம் கரூர் & திண்டுக்கல் மாவட்டங்களில் 11,806.56 ஹெக்டேர் பரப்பளவில் அமைத்து தமிழக அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை சார்பாக இந்த செய்தி குறிப்பு தற்போது வெளியாகி உள்ளது. தேவாங்கு என்ற ஒரு விலங்கு நாட்டில் குறிப்பாக அழிந்து வரக்கூடிய இனமாக இருக்கக்கூடிய நிலையில், கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் 11,806 ஹெக்டர் நிலத்தை இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயமாக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.. இதற்கான அரசாணை தற்போது வெளியாகியுள்ளது.
தேவாங்குகள் இரவு நேர பாலூட்டிகள், அவை மரவகை இனத்தை சேர்ந்தது. தங்கள் வாழ்நாளில் பெரும் பகுதியை மரங்களில் கழிக்கின்றன. இந்த இனம் விவசாய பயிர்களுக்கு சேதம் உண்டாக்கும் பூச்சிகளை வேட்டையாடி விவசாயிகளுக்கு நன்மை ஏற்படுத்துகின்றன. இந்த இனங்கள் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன. இயற்கையை பாதுகாக்கும் தேவாங்கு இனம் அழிந்து வரும் இனமாக பட்டியலிடப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் வெளியிடப்பட்ட அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.