இந்தியாவிற்கு மருத்துவ உதவிகளை அளிப்பதற்காக சுமார் 40 நாடுகள் விருப்பம் தெரிவித்திருக்கிறது என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்திருக்கிறார்.
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை நாட்டையே புரட்டிப் போட்டு வருகிறது. இதனால் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று ஏற்படும் நபர்களின் எண்ணிக்கை லட்சத்தை தாண்டி வருகிறது. இதில் குறிப்பாக டெல்லி மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கொரோனா பரவல் உச்சத்தை அடைந்து வருகிறது.
இதனால் ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே இந்தியாவிற்கு உதவும் வகையில் ஆக்சிஜன் பெற, அனைத்து நாடுகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தும்படி வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தூதர்களை கேட்டிருக்கிறார். இந்நிலையில் இந்தியாவிற்கு உதவுவதற்கு சுமார் 40 நாடுகள் முன் வந்துள்ளது என்று தூதர்கள் கூறியதாக ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தியா பல்வேறு நாடுகளுக்கு தடுப்பூசிகளை இலவசமாக வழங்கி உதவியது. இதன் பலனாகத்தான் தற்போது பல்வேறு நாடுகள் இந்தியாவிற்கு உதவ விருப்பம் தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர் கூறியுள்ளார்.