Categories
உலக செய்திகள்

இந்தியாவின் நிலையால் பிரிட்டன் இளவரசர் வருத்தம்.. வெளியிட்டுள்ள அறிக்கை..!!

பிரிட்டன் இளவரசர் சார்லஸ் இந்தியாவில் கொரோனா அதிக தாக்கத்தை ஏற்படுத்துவது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்தியாவில் கொரோனா அதிகரித்து வருவது தொடர்பாக, பிரிட்டன் இளவரசர் சார்லஸ் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில் உலகம் முழுவதிலும் ஓராண்டிற்கும் மேலாக கொரோனா பாதிப்பு பேரழிவை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இந்தியாவில் இந்த வாரத்தில் கொரோனாவின் கொடூரத்தை வெளிப்படுத்தும் வகையில் வெளியான புகைப்படங்களைக்கண்டு நான் மிகுந்த கவலையடைந்துள்ளேன்.

பெரும்பாலானோருக்கு இந்தியா மீது அன்பு உண்டு, அதே போன்று தான் நானும் இந்தியா மீது அதிக அன்பு கொண்டுள்ளேன். அங்கு பல அற்புதமான பயணங்களை செய்திருக்கிறேன். இந்திய நாட்டின் உதவி மற்றும் புத்தி கூர்மை மிகக் கடினமான சமயங்களில் பிற நாடுகளுக்கு ஆதரவை தந்தது.

மற்ற நாடுகளுக்கு இந்தியா உதவி செய்தது போன்று தற்போது நாம் இந்தியாவிற்கு உதவ வேண்டும். இந்த இக்கட்டான சூழலில் ஏதாவது செய்து உயிர்கள் பலியாவதை நிறுத்துவதற்கு உதவ வேண்டும். இந்த அடிப்படையில் பிரிட்டிஷ் ஆட்சி அறக்கட்டளை இந்திய புலம்பெயர்ந்தோரின் ஆதரவுடன் இந்தியாவிற்கு அவசர உதவிக்கோர தொடங்கியிருக்கிறது.

இதற்கு வணிகங்கள், அறக்கட்டளைகள், புலம்பெயர்ந்த உறுப்பினர்கள் மற்றும் அமைப்புகள் போன்ற பல ஆதரவு கிடைத்திருக்கிறது. இந்திய மக்களுக்கு தேவையான சமயத்தில் உதவ நம்மில் இன்னும் சிலர் ஆதரவை அளிக்க முடியும் என்று நான் நம்புகிறேன். இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன். ஒற்றுமையாக நாம் அனைவரும் இந்த போரை வெல்வோம் என்று தெரிவித்திருக்கிறார்.

Categories

Tech |