பிரதமர் நரேந்திர மோடி அரசின் கீழ் இந்தியாவின் அரிசி ஏற்றுமதி 109 சதவீதம் வளர்ச்சி அடைந்திருக்கிறது என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்திருக்கிறார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது, இந்தியாவின் அரிசி ஏற்றுமதி 2013-14ம் நிதி ஆண்டு மற்றும் 2021-22ம் நிதி ஆண்டிற்கு இடையே 109 சதவீதம் என்ற அசுர வளர்ச்சியை அடைந்திருக்கிறது.
மேலும் 2013-14ம் நிதி ஆண்டில், பாசுமதியைத் தவிர்த்து, அரிசி ஏற்றுமதி 2,925 மில்லியன் டாலராகக இருந்தது, அதுவே, 2021-22 நிதியாண்டில் 109 சதவீதம் அதிகரித்து 6,115 மில்லியன் டாலராக அதிகரித்திருக்கிறது.மோடி அரசின் கொள்கைகளால், விவசாயிகள் உலக சந்தையை அணுகுவதும், உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யதும் எளிமையாகி இருக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.