இந்தியா வரும் ட்ரம்ப் இன்னும் சற்று நேரத்தில் இந்தியா வருகின்றேன் என ஹிந்தியில் ட்வீட் செய்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முதல் முறையாக தனி விமானம் மூலம் அரசு முறை பயணமாக நேற்று அமெரிக்காவில் இருந்து புறப்பட்டு, குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரின் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று மதியம் 12 மணியளவில் வந்து இறங்கினார். அவருடன் மனைவி மெலனியா, மகள் இவான்கா ஆகியோரும் வந்துள்ளனர். விமான நிலையத்தில் இந்திய பிரதர் மோடி, அதிபர் டிரம்ப்பை கைகுலுக்கி ஆரத்தழுவி வரவேற்றார். மேலும் டிரம்ப் மனைவி மற்றும் மகளுக்கும் கைகுலுக்கி வரவேற்றார் மோடி.
அதை தொடர்ந்து விமான நிலையத்தில் குஜராத் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னதாக பயணத்தின்போது, தனது ட்வீட்டர் பக்கத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் ட்விட் செய்திருந்தார். அதில், இன்னும் சற்று நேரத்தில் இந்தியர்களை சந்திக்க இருக்கின்றேன் என்று தனது ட்வீட்டர் பக்கத்தில் ஹிந்தியில் பதிவிட்டுள்ளார்.
हम भारत आने के लिए तत्पर हैं । हम रास्ते में हैँ, कुछ ही घंटों में हम सबसे मिलेंगे!
— Donald J. Trump (@realDonaldTrump) February 24, 2020