உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களுக்கு ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் சுதந்திர தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்திய சுதந்திர தினத்தை இன்று உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர்களுக்கு ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் வாழ்த்து கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” ஆஸ்திரேலியாவின் நீண்டகால நட்பு நாடு இந்தியா. இரு நாட்டின் உறவுகளும், நம்பிக்கை மற்றும் மரியாதையை அடித்தளமாகக் கொண்டு உருவாகியது. இந்த நட்புறவு மிகவும் ஆழமானது.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஆஸ்திரேலியாவுக்கு வந்திருந்தபோது, நமது கலாச்சாரம் வேறுபட்டிருந்தாலும், நாம் ஒரே விஷயத்தில் மட்டும் நம்பிக்கை வைத்திருக்கிறோம் என்று அவரிடம் கூறினேன். இந்த உறவை பிரதமர் மோடியும், நானும் இணைந்து மேலும் ஒரு படி உயர்த்தி இருக்கிறோம்” என்று அவர் கூறியுள்ளார்.