இந்திய மக்கள் கடன் வாங்கி வாழ்வதாக ஆய்வு ஒன்று கூறியுள்ளது.
இந்தியாவில் கடந்த 2020-ஆம் ஆண்டு கொரோனா தொற்று அதிகரித்தது. இதனால் மக்கள் வேலைக்கு போக முடியாமல் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய செலவுகளுக்கே ஏராளமானோர் சிரமப்பட்டனர். மேலும் இந்த செலவுகளை சமாதிப்பதற்காக வங்கிகள், கிரெடிட் கார்ட் ஆகியவற்றின் மூலம் கடன் வாங்கினர். ஆனால் ஏழை எளிய மக்களால் இப்படி கடன் வாங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அவர்கள் தங்களது தெரிந்தவர்கள் மற்றும் நண்பர்களிடமிருந்து கடன் வாங்கி சமாளித்தனர்.
மேலும் சிலர் கடன் கிடைக்காமல் வேறு வழியின்றி கந்து வட்டிக்கு கடன் வாங்கி செலவுகளை சமாளித்துள்ளனர் . இந்நிலையில் பேங்க் பஜார் சார்பாக ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. அதில் 22 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்களிடம் மட்டுமே இந்த ஆய்வு எடுக்கப்பட்டுள்ளது. அதில் 57 சதவீதத்தினர் தங்களது தேவைகளை பூர்த்தி செய்வதற்கு புதிதாக கடன் வாங்கியதாகவும், அதனை திருப்பி செலுத்துவதற்கு 4 சதவீதத்தினர் மட்டுமே சிரமப்பட்டதாகவும், 51 சதவீதத்தினர் எளிதாக கடன் கிடைக்காததாகவும் கூறியுள்ளனர். மேலும் பெண்களை விட ஆண்களுக்கு அதிக அளவு கடன் கிடைத்துள்ளது. அதில் வீட்டுக் கடன் வாங்க முயற்சிக்கவில்லை என்றும் 6 சதவீதத்தினர் தெரிவித்துள்ளனர்.