இந்தியன் 2 படப்பிடிப்பி விபத்து குறித்து கமலிடம் விசாரணை நடத்தியதற்கு மக்கள் நீதி மய்யம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் நேரிட்ட விபத்து தொடர்பாக நடிகர் கமலஹாசனிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் 2 மணி நேரத்துக்கு மேலாக விசாரணை நடத்தினர். கடந்த பிப்ரவரி 19ம் தேதி இந்தியன் 2 படப்பிடிப்பின் போது கிரேன் அறுந்து விழுந்ததில் உதவி இயக்குனர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். விபத்து குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசாருடன் இப்படத்தின் இயக்குனர் ஷங்கர் நேரில் விளக்கமளித்த நிலையில் கமலஹாசன் நேரில் ஆஜரானார்.
3 மணிநேரதிற்கு மேலாக போலீசுக்கு விளக்கமளித்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் விபத்து குறித்த விவரங்களை காவல்துறையினரிடம் தெரிவித்ததாக கூறினார். எங்கள் துறையில் இனி இதுபோன்ற விபத்துக்கள் நேராமல் இருப்பதற்கு முதல்கட்ட முயற்சியாகவே இந்த கலந்துரையாடலை நான் கருதுகிறேன் என்று கமலஹாசன் கூறினார்.இதனிடையே மக்கள் நீதிமன்ற தலைவர் கமலஹாசனிடம் காவல்துறை விசாரணை நடத்தியதற்கு அந்த கட்சி கண்டனம் தெரிவித்தது.
இதுகுறித்து அந்த கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியன் 2 படப்பிடிப்பில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட விபத்தில் உதவி இயக்குனர் உட்பட 3 பேரும் உயிரிழந்ததை சுட்டிக்காட்டியுள்ளது. இதற்காக சாட்சி என்ற பெயரில் கமலஹாசனை காவல்நிலையத்திற்கு வரவழைத்து 3 மணிநேரம் விசாரணை நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது. கட்சியில் வளர்ச்சியை பிடிக்காத தமிழக அரசு காவல் துறை மூலமாக விசாரணைக்கு நடத்தியதாகவும் குற்றம் சாட்டியுள்ளது. இதுபோன்ற செயலை தமிழக அரசு இத்துடன் நிறுத்திக்கொள்ளவும் என அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .