Categories
தேசிய செய்திகள்

இந்தியன் வங்கி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. வட்டி விகிதம் அதிரடி உயர்வு….!!!!

இந்தியாவின் பொதுத்துறை வங்கி யான இந்தியன் வங்கி 2 கோடி ரூபாய்க்கு உட்பட்ட ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த புதிய வட்டி விகிதங்கள் கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் அமலுக்கு வந்ததாகவும் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக ஒரு ஆண்டுக்கான பிக்சட் டெபாசிட்டுக்கு இந்தியன் வங்கி ஐந்து புள்ளி 25 சதவீதம் வட்டி வழங்கி வந்தது.இந்நிலையில் ஒரு வருடத்திற்கான வட்டி விகிதத்தை 5.30 சதவீதமாக உயர்த்தி இந்தியன் வங்கி அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதிய வட்டி:

7 – 14 நாட்கள் : 2.80%

15 – 29 நாட்கள் : 2.80%

30 – 45 நாட்கள் : 3%

46 – 90 நாட்கள் : 3.25%

91 – 120 நாட்கள் : 3.50%

181 நாட்கள் – 9 மாதம் : 4%

9 மாதம் – 1 ஆண்டு : 4.40%

1 ஆண்டு : 5.30%

1 ஆண்டு – 2 ஆண்டு : 5.40%

2 ஆண்டு – 3 ஆண்டு : 5.50%

3 ஆண்டு – 5 ஆண்டு : 5.60%

5 ஆண்டு : 5.60%

5 ஆண்டுகளுக்கு மேல் – 5.60%

Categories

Tech |