பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது வீட்டை புதுப்பித்தல் தொடர்பாக தேர்தல் ஆணையம் எடுக்கும் நடவடிக்கைக்கு கட்டுப்படுவேன் என தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் டவுனிங் தெருவில் உள்ள பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு சொந்தமான வீட்டை புதிதாக கட்டிய செலவு நன்கொடையாளர்கள் கொடுத்த பணம் என சமீபத்தில் குற்றச்சாட்டு எழுந்தது. இதனிடையே 10 டவுனிங் தெருவில் உள்ள வீட்டை விட இப்போது கட்டியிருக்கும் 11 டவுனிங் இருக்கும் வீடு பெரிதாக உள்ளதால் அந்த வீட்டில் போரிஸ் ஜான்சன் தனது வருங்கால மனைவி மற்றும் குழந்தைகளுடன் வாழ்ந்து வருகின்றார்.
இந்த குற்றச்சாட்டில் புதுப்பித்தல் பணியில் ஈடுபட்டுள்ளதால் குற்றங்கள் நிகழ்ந்திருக்கலாம் என கடந்த புதன்கிழமை தேர்தல் ஆணையம் கூறியது.இந்நிலையில் இதுகுறித்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறுகையில் தேர்தல் ஆணையம் எடுக்கும் முடிவுக்கு தான் ஒத்துழைப்பின் என உறுதியளித்துள்ளார்.