Categories
பல்சுவை

இந்தப் பெண்மணியின் தைரியத்தை…. பாராட்டியே ஆக வேண்டும்…. எதற்காக தெரியுமா….?

உலகத்தில் தங்களின் உழைப்பு, விடாமுயற்சி, சாதனைகள் மற்றும் போராட்டங்களால் மற்றவர்களுக்கு உதாரணமாக திகழும் தலை சிறந்த பெண்மணிகள் பலர் இருக்கின்றனர். இந்நிலையில் Bethany Hamilton என்ற பெண் தன்னுடைய சிறுவயதில் இருந்தே Surfing செய்வதில் மிகவும் ஆர்வமாக இருந்துள்ளார். இவர் தன்னுடைய 23 வயதில் தோழிகளுடன் சேர்ந்து கடலில் Surfing செய்து கொண்டிருந்தார். அப்போது ஒரு சுறாமீன் அவரின் கையை கடித்து துண்டாக்கி விட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் Bethany Hamilton-ஐ மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இவர் சிகிச்சை முடிந்து மயக்கத்தில் இருந்து எழுந்தவுடன் தன்னுடைய ஒரு கை இல்லாததை நினைத்து மிகவும் வருத்தப்பட்டார். இருப்பினும் Bethany Hamilton மனம் தளராமல் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய 23 நாட்களில் ஒரு Surfing போட்டியில் கலந்து கொண்டார். இந்த போட்டியில் அந்தப் பெண் முதல் பரிசை வென்றார். மேலும் தனக்கு இருக்கும் குறைகளை எண்ணி கவலைப்படாமல் மன தைரியமும், விடாமுயற்சியும் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை இந்தப் பெண் நிரூபித்திருக்கிறார்.

Categories

Tech |