Categories
அரசியல்

இத மட்டும் செய்யுங்க…. ‘அதுதான் எங்களுக்கு சிறந்த பொங்கல் பரிசு!’…. சு.வெங்கடேசன் எம்.பி. பெருமிதம்….!!!!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த, மதுரை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
“சென்னை ஆர்.ஏ.புரம் பாரத் ஸ்டேட் வங்கி கிளையில் (எஸ்பிஐ) லாக்கர் படிவம் தமிழில் இல்லாததால் வாடிக்கையாளர் சிரமப்படுவது குறித்து வங்கி தலைவருக்கு கடிதம் எழுதியிருந்தேன். அதற்கு அவ்வங்கியின் தலைமை பொது மேலாளர் தேவேந்திர குமார் பதில் அளித்துள்ளார்.

அதில், “வங்கி படிவங்கள் மாநில மொழிகளில் உறுதி செய்யப்படுவது தொடர்பாக வங்கியின் தலைவருக்கு நீங்கள் எழுதிய கடிதம் கிடைக்கப் பெற்றோம். வாடிக்கையாளர்கள் எளிதில் புரிந்து கொள்வதற்கும், வங்கி சேவைகளை எளிதாக்கவும் நாங்கள் வங்கியின் படிவங்கள் மற்றும் இதர எழுது பொருட்களை மாநில மொழி உட்பட மும்மொழிகளில் வழங்குவதில் உறுதியாக இருக்கிறோம். அதன்படி வரைவோலை வரைவோலை / RTGS / NEFT தொடர்பான படிவங்கள் அனைத்தும் குறைவாகப் பயன்படுத்தப்படும் சில படிவங்களும் கூட தமிழில் கிடைப்பதற்கான ஏற்பாடுகள் செய்து வருகிறோம். விரைவில் அவை கிடைக்கும். சம்பந்தப்பட்ட கிளைக்கு ஏற்கனவே மாநில மொழியில் லாக்கரை திறப்பதற்காள பதிவேடு வழங்கப்பட்டு விட்டது.

மாநில மொழிகளில் அனைத்துப் படிவங்களையும் கட்டாயம் வழங்க வேண்டுமெனவும், தேவையெனில் மேலும் புரிதலுக்காக உள்ளடக்கங்களை வாடிக்கையாளர்களுக்கு சேவையை சற்றும் தளர்வின்றி வழங்குவோம் என எஸ்பிஐ சார்பாக உறுதியளிக்கிறோம்.” பொங்கல் விழாவினையொட்டி எஸ்பிஐ சார்பில் இவ்வுறுதி அளிக்கப்பட்டு உள்ளது தமிழகத்துக்கான சிறந்த பொங்கல் பரிசாகும். வங்கியின் பொது மேலாளருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Categories

Tech |